பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமதுவை சூதாட்டத்தில் ஈடுபடுத்த முயன்றவர் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் இலங்கையுடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் அணித்தலைவர் சர்ப்பராஸை சூதாட்டத்தில் ஈடுபடும்படி கூறி ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.
அதனை மறுத்த சர்ப்பராஸ் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானிய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், இச்செயல் மூலம் சர்ப்பராஸ் தன்னை மற்றவீரர்களுக்கு நல்ல உதாரணமாக காட்டியுள்ளார்.
சரியான முறையில்அவர் இந்த பிரச்சனையை கையாண்டிருப்பது அவர் மீது அதிக மரியாதையை ஏற்படுத்தியுள்ளது என புகழ்ந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஷர்ஜீல்கான், காலித்லத்தீஃப் ஆகிய வீரர்கள் விளையாட தடை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பாகிஸ்தானிய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.