சூடானில் கடும் மழை: 76 பேர் பலி
சூடானில் கடந்த சில தினங்களாக பெய்த வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 76 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துவிட்டன.
சில நிகழ்வுகளில், ஒட்டுமொத்த கிராமமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
சூடானில் உள்ள 18 மாகாணங்களில், 13 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நைல் நதி, இந்த நூற்றாண்டிலேயே அதிகபட்ச உயர்மட்டத்தில் இருப்பதாக நீர் மற்றும் பாசன அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்னும் அதிக மழையை எதிர்நோக்கி காத்திருக்கிறது சூடான்.