சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளரான Tariq Ramadan, பரிசில் வைத்து விசாரணைக்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் பிரபல இஸ்லாம் மதம் தொடர்பான ஆராய்ச்சியாளரும், எழுத்தாளருமான Tariq Ramadan, இன்று புதன்கிழமை பரிசில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 2017 ஆம் ஆண்டு இவர் மீது இரு பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளது. முதல் குற்றச்சாட்டினை Henda Ayari எனும் பெண்ணும், இரண்டாவது குற்றச்சாட்டினை பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் தெரிவித்துள்ளனர்.
குறைந்தது 48 மணிநேரங்களுக்காகவது இவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவார் என அறிய முடிகிறது. இந்த குற்றச்சாட்டினால் உடனடியாக இவர் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.