சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வெடிவிபத்தில் சிக்கி நான்கு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் இரண்டு பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூரிச் Fehraltorf பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள பண்ணை வீட்டிலேயே இந்த வெடி விபத்து இடம்பெற்றுள்ளது.
பண்ணை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயத்துடன் இரத்தம் வடிந்த நிலையில் நான்கு சிறுவர்களை கண்ட அப்பகுதி மக்கள் உடனே மீட்புக்குழுவினருக்கும், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்களை ஹெலிகொப்டர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 12 வயதுடையவர்கள் என பொலிசார் தகவல் அளித்துள்ளனர்.
வெடி விபத்திற்கான காரணம் குறித்து சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த பண்ணை வீடு 1905ம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், அந்த பகுதி தொழிற்சாலை பகுதியாக இருந்தது எனவும் தெரியவந்துள்ளது.