தமிழகம், சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி விவகாரத்தை இன்னமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கலைச்செல்வி என்ற இளம்பெண் ஆதிக்க சாதியினரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு சுவாதியை விட கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் கடந்த 31 ஆம் திகதி ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் கலைச்செல்வி என்ற இளம்பெண் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலைச்செல்வியின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் துணியை திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பிரேதபரிசோதைனயில் அறிக்கையில் பாலியல் சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கொலையை செய்த ராஜா மற்றும் குமார் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்வதிலும் காவல்துறை மெத்தனம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எவிடென்ஸ் அமைப்பினர் தலையிட்ட பின்னரே அவர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஊரில் குறைவான எண்ணிக்கையில் வசிக்கும் தலித் சமூகத்து பெண்களை, அதே ஊரை சேர்ந்த ஆதிக்க சாதியினர் சிலர் இது போன்ற பாலியல் கொடுமைகள் செய்வதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. வருடத்திற்கு 15 பெண்களாவது இது போன்று பாதிக்கப்படுகிறார்கள்.
தங்களை காப்பாற்றும்படி அந்த ஊர் தலித் மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.
என் மகளை கொலை செய்த மாதிரியே அவர்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேண்டாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம் என கதறி அழுகிறார் கலைச்செல்வியின் தந்தை ராஜேந்திரன்.
– See more at: http://www.canadamirror.com/canada/67250.html#sthash.iJ4P1tmB.dpuf