சுழலில் சுருண்டது அவுஸ்திரேலியா: உலக சாதனை படைத்தார் அஸ்வின்
தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ஓட்டங்களுக்கு சுருண்டது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன் போது சிறப்பாக விளையாடிய அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் 111 ஓட்டங்களில் அஸ்வின் வீசிய பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா வீரர் ஸ்டெயின் 2007-08 சீசனில் 78 விக்கெட்டுகளை வீழ்த்தி படைத்த உலக சாதனையை, அஸ்வின் ஒரே சீசனில் 79 விக்கெட்டுகளை கைப்பற்றி முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அதே சமயம் முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களான வார்னர், Handscomb, மேக்ஸ்வெல், கம்மின்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ந்து விளையாடி அவுஸ்திரேலிய அணி முதல் இன்னங்சில் 300 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அதிகபட்சமாக ஸ்மித் 111 ஓட்டங்கள் குவித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.