ரஷ்ய அதிபர் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளார் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின்.
தற்போது ரஷ்யாவின் அதிபராகப் பதவி வகிக்கும் விளாடிமிர் புதினின் பதவிக்காலம் வருகிற 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் அடுத்த ரஷ்ய அதிபருக்கான அடுத்தத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியையும் சாராமல் தனித்து சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து புதின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “கடந்த அதிபர் தேர்தல் ஐக்கிய ரஷ்ய கட்சியின் சார்பில் போட்டியிட்டேன். ஆனால், வருகிற 2018 தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் நான் வருகிற தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவேன். இதனால் பல இதரக் கட்சிகளின் ஆதரவு எனக்குக் கிடைக்கும். வருகிற தேர்தலில் எனக்கு எதிராகக் கடுமையான போட்டி நிலவ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. எதிர்க்கட்சித் தலைவரைப் பொறுத்தவரையில் அவர் வரும் தேர்தலில் போட்டியிட முடியாது. அதிகப்படியான ஊழல் புகார்களில் எதிர்க்கட்சித் தலைவர் சிக்கியிருக்கிறார்” என்றார்.