பதவிகளை எதிர்பார்க்காமல் ஸ்ரீ ல.சு.கட்சியினதும் அங்கத்தவர்களினதும் வெற்றியைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்துக் கொள்ளுமாறு தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொள்வதாக அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீ ல.சு.கட்சியுடன் ஒன்று சேர்வது தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சி முன்வைத்துள்ள நிபந்தனை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து பயணிப்பதில் எமக்கு எந்தவித சங்கடமும் இல்லை. எமக்கு இணைந்து செயற்படுவதற்கான ஒரு பொன்னான காலம் உருவாகியுள்ளது. நாம் இணைந்தால், எமது சொந்தக் காலில் நிற்கலாம். முதலில் நாம் உள்ளுராட்சி சபைத் தேர்தலை இணைந்து வெற்றி கொள்வோம். பின்னர் பதவிகள், அமைச்சுக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.