முஸ்லிம் சிறுமிகளுக்கு சுன்னத் எனப்படும் கத்தனா செய்யப்படுவதற்கு எதிராக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவை முஸ்லிம் பெண்கள் இன்று (06) சந்திக்கவுள்ளனர்.
இவர்கள் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவிடம் இதுதொடர்பில் முறையிட்டு, நீதியை பெறவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
அதேவேளை சில நாடுகளில் இவ்வாறு பெண் சிறுமிகளுக்கு கத்னா செய்வது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றும் சில நாடுகளில் இவ்வாறு செய்வது பெண் உறுப்பை சிதைத்தல் என்ற குற்றத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.