படத்தை பற்றி டைரக்டர் சுந்தர் சி. கூறியதாவது:-
“இந்த படத்துக்காக ஜெயம் ரவி, ஆர்யா இருவரும் 1½ ஆண்டுகள் ‘கால்ஷீட்’ கொடுத்து முழுமையான ஈடுபாடுடன் நடிக்க இருக்கிறார்கள். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
பத்ரி வசனம் எழுதுகிறார். என்.ராமசாமி தயாரிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் வட இந்தியாவில் பேரரசர்கள் வாழ்ந்த கோட்டைகளிலும், அரண்மனைகளிலும் நடைபெற இருக்கிறது.
நீரிலும், நிலத்திலும் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி தொடங்க இருக்கிறது. வெற்றி பெற்ற பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தலை சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், இந்த படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள்