சீனாவில் ஐஸ் திருவிழாவின் ஒருபகுதியாக தங்கள் வாழ்க்கை துணையை கரம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சீனாவில் குளிர்காலம் துவங்கியவுடன் கொண்டாடப்படும் முதல் நிகழ்ச்சி ஐஸ் திருவிழாவாகும். இந்த திருவிழாவில் திருமணம் செய்து கொள்வது பாரம்பரிய நிகழ்வாக கருதப்படுகிறது. திருமண ஆடைகளுக்கு மேல் குளிருக்கு இதமாக கம்பளிகள் அணிந்து தம்பதிகள் அணிவகுத்தனர்.
இது பற்றி பேசிய விழாவில் பங்கேற்ற மணமக்கள், பனிப்பகுதியில் திருமணம் செய்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது பலரது குழந்தை பருவ கனவாக உள்ளதாக தெரிவித்தனர்.
மேற்கண்ட கனவை நிறைவேற்ற தமது கணவர் இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக மணப்பெண் ஒருவர் கூறினார்.
மேலும் பேசிய ஷூவோ யிலு என்ற மணப்பெண் தங்களது காதல் போலவே இந்த பனியும் தூய்மையானது என்றார். இது மிகவும் அருமையான தருணம் என சிலாகித்த அவர், தங்களுக்கு இது ஒரு நல்ல தொடக்கம்.
ஒருவருக்கொருவர் நேசித்து மகிழ்வுடன் இருப்போம் என்றார். ஹார்பென் நகரில் நடைபெற்று வரும் 34-வது ஐஸ் திருவிழாவை கொண்டாடும் வகையில் 34 ஜோடிகளின் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தையொட்டி சீனாவில் மேற்கொள்ளப்படும் திருவிழாக்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.