கனடாவின் 150-வது பிறந்த நாளை கொண்டாடுவது கத்லின் றான்டல் என்பவரின் தோட்ட கலையாக இருந்தது.
இளைப்பாறிய ஆசிரியரான இவர் 150 ரியுலிப் கிழங்குகளை ஆர்வத்துடன் கடந்த அக்டோபரில் நட்டுள்ளார்.
கனடிய கொடிக்கு ஒத்ததாக சிவப்பு மற்றும் வெள்ளை இதழ்களை கொண்ட பூக்களாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நட்டார்.
தற்போது அவை அரும்ப தொடங்கி விட்டன இருப்பினும் ஒரு பிரச்சனை-அவரது பூக்கள் ஒரேஞ்ச் நிறமாக.
இவற்றை தனது தோட்டத்தில் விசேடமாக ஒரு மூலையில் நட்டிருக்கின்றார் காரணம் கனடா தினத்தன்று காணக்கூடியதாக இருக்கும் என்பதால் என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இவரை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. இப்பூக்களை முகநூலில் பதிவு செய்தார்.
ஏமாற்றமடைந்தது இவர் மட்டுமல்ல என்பது தெரியவந்தது. பல தோட்டக்காரர்கள் தங்கள் ஏமாற்றத்தை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காரணம் தான் இல்லை என்பது கத்தலினிற்கு ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த இலையுதிர் காலத்தில் முக்கிய சில்லறை விற்பனையாளர்களான ஹோம் ஹாட்வெயர் இடமிருந்து வாங்க பட்டவை இந்த கிழங்குகள். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் வாங்கியதற்கான அத்தாட்சியை நிரூபிப்பவர்களிற்கு முழு பணமும் திரும்ப கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாடிக்கையாளர்கள் ஒறேஞ் நிற பூக்களை தங்கள் நிறுவனங்களில் அத்தாட்சியுடன்- பூக்களின் படங்கள்உட்பட்ட-கொண்டு வந்தால் நெதர்லாந்திலுள்ள விநியோகஸ்தர்களுடன் தொடர்பு கொண்டு என்ன தவறு நடந்ததென கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கனடியர்களிற்கு மிக விசேடமானதாகும்.அதனை அவர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தாங்கள் உறுதிசெய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஹோம் ஹாட்வெயர் நிறுவனத்தினர் தவறான நிற பூக்கள் குறித்து 31-அறிக்கைகளை பெற்றுள்ளனர். 4-மில்லியன் கனடா 150 ரியுலிப் கிழங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரியுலிப்ஸ், கனடாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையில் ஒரு நீண்டகால நட்பின் அடையாளமாகும். 1945ல் முதன் முதலாக 100,000 ரியுலிப்ஸ் பூக்களை கனடாவிற்கு அனுப்பி வைத்தது நெதர்லாந்து. இரண்டாம் உலக போரில் சிறிய ஐரோப்பிய நாடான நெதர்லாந்தை விடுவிக்க கனடியர்கள் ஆற்றிய பங்கிற்கு நன்றியறிதலை காட்டும் பொருட்டு இவ்வாறு அனுப்பி வைத்தனர்.
நெதர்லாந்தின் தேசிய நிறம் ஒறேஞ்ச் ஆகும். கனடா 150 சென்றடையும் ஒரு வழியாகவும் இது அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.