சிறுவர் பராமரிப்பாளர் தற்செயலாக மூச்சுத்திணறடித்ததால் ஒரு வயது சிறுவன் மரணம்!
யு.எஸ்.-யுட்டாவை சேர்ந்த ஒருவயது சிறுவன் ஒருவன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உலர்ந்த பீன்ஸ் நிரப்பபட்ட பை கதிரைக்கு கீழ் அகப்பட்டு மூச்சுத்திணறியதால் இறந்துள்ளான்.
லியனாடோ சான்செஷசிற்கு இரண்டாவது பிறந்த நாள் வருவதற்கு சில நாட்களே இருந்தன.ஆனால் “துரதிஷ்டமான விபத்து” ஒன்றினால் இறந்து விட்டான் என பொலிசார் தெரிவித்தனர்.
லியொனாடோ மற்றய சிறுவர்களுடன் பராமரிப்பு நிலையத்தில் விளையாடிக்கொண்டிருந்தான்.பீன் பை கதிரைக்கு அடியில் மறைந்து கொள்ள சென்றான். அதன் மேல் நிலையத்தில் பணிபுரிபவர் அமர்ந்திருந்தார் என அதிகாரிகளின் கூற்று பிரகாரம் தெரியவந்துள்ளது.
அடியில் நசிபட்டதால் சிறுவன் இறந்துவிட்டான். பெற்றோர் சம்பவத்திற்கான பதில்களை கோரியுள்ளனர்.
சம்பவம் குறித்து புலன்விசாரனை நடைபெறுவதாக யுட்டா சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய சம்பவம் எவ்வாறு நடந்தது குறித்த கேள்வி எழுந்துள்ளது.