சிறிலங்காவின் வான்பரப்பில் மர்ம ஒளி தெரிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வான் பரப்பில் X போன்ற வடிவில் வெளிச்சம் அடிக்கடி தென்படுவதால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பல பகுதிகளில் இந்த வெளிச்சம் தோன்றியுள்ளதுடன், அது வேகமாக நகர்ந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணி சுமார் 30 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த வெளிச்சம் தோன்றி மறைவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணி மற்றும் 11 போன்ற நேரங்களில் வெளிச்சம் மக்களினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், இதுவரை கேட்காத சத்தம் ஒன்றும் இந்த வெளிச்சத்துடன் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மர்ம வெளிச்சம் காணமாக இதுவரை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பவில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முழுமையான தகவல் வெளியாகும் வரை எவரும் பதற்றமடைய வேண்டாம் எனவும் ஆய்வாளர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மர்ம வெளிச்சம் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
இது வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். மற்றும் சிலர் வெளிநாடுகளின் உளவு விமானத்தின் சமிக்ஞையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.