சிறிதரனின் குற்றச்சாட்டை மறுக்கும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்!
புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புற்று நோய்யை ஏற்படுத்தும் ஊசி மருந்து உடலில் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் இலாபம் பெறுவதற்காக இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கும் போது சர்வதேச வரையறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கை இராணுவம் எந்த சந்தர்ப்பத்திலும் துன்பம் ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்பட்ட காலத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகியவர்களுக்கு துன்புறுத்தியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.