சிரிய போரின் கோர முகங்களை வெளிச்சமிட்டு காட்டும் அப்பாவி பொதுமக்கள்!
சிரியாவில் நடைப்பெற்று வரும் உள்நாட்டு போரின் கோரமுகங்களை அந்த நாட்டைச் சேர்ந்த அப்பாவி பொது மக்கள் சமூக ஊடகத்தின் உதவியுடன் வெளியுலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிவருகிறார்கள்.
இந்த நாட்டில் கடந்த 2011–ம் ஆண்டு முதலே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.
மற்றொரு புறம் ஐ.எஸ். அமைப்பினரும் சிரிய அரசு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக சிரிய ராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்க மற்றும் ரஷிய படைகளும் சண்டையிட்டு வருகின்றன.
இந்த சிரிய உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். சிரிய மக்கள் தங்களது நாட்டில் நடைப்பெற்று வரும் போர் சூழலையும், அந்த போரில் சிக்கி மரண தருவாயில் இருக்கும் தங்களது நிலைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் உணர்ச்சிபூர்வமான பதிவுகளை இட்டு வருகின்றனர்.
என்னுடைய பெயர் பானா, எனக்கு 7 வயது ஆகிறது. கிழக்கு அலெப்போ பகுதியில் இருந்து பேசி வருகிறேன். வாழ்வா சாவா போராட்டத்தின் கடைசி தருணத்தில் நாங்கள் இருக்கிறோம்.
My name is Bana, I’m 7 years old. I am talking to the world now live from East #Aleppo. This is my last moment to either live or die. – Bana
போரின் போது எனது அப்பாவிற்கு காயம் ஏற்பட்டுவிட்டது. நான் தற்போது அழுது கொண்டு இருக்கிறேன்.
My dad is injured now. I am crying.-Bana #Aleppo
எங்களுக்காக மனிதநேயத்துடன் துணை நின்ற அனைத்து மனிதர்களுக்கும் நன்றி. உங்களை மறக்க மாட்டோம்.
I would like to thank all the humans whose stood for the humanity with our case, i will never forget you if we passed to the other life