சிரிய அகதிகளை கனடாவிற்குள் கொண்டுவருவதில் சிக்கல் நிலை
துருக்கியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை காரணமாக சிரிய அகதிகளை கனடாவிற்கு அழைத்துவருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் இராணுவத்தினரின் ஒரு தரப்பினர் அங்கு இராணுவப் புரட்சியை ஏற்படுத்த எடுத்திருந்த முயற்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து, சதி முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் எடுத்துள்ளது. இதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கப் பணியாளர்கள் பலர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண நிலைமை காரணமாக அங்குள்ள சிரிய அகதிகளை கனடாவிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளதாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய துருக்கியில் உள்ள 549 சிரிய அகதிகள் கனடாவிற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் போக்குவரத்தை சீரில்லாத காரணத்தினால் முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையிலும் தாம் இது தொடாபில் துருக்கிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.