சிரியாவில் ரக்கா நகரத்தில் ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியப் படைகள் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிரிய ஜனநாயக படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “சிரியாவின் ரக்கா நகரத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டனர். ரக்கா நகரம் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது.
எங்களுடைய இந்த வெற்றி தீவிரவாதத்துக்கு எதிரானது. சிரியாவில் ரக்காவின் விடுதலை சிரியாவில் சமீபத்திய அத்தியாயத்தை குறிக்கிறது” என்றார்.
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசு அமெரிக்க படைகளுடன் இணைந்து சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.