சிரியாவின் அலெப்போவில் வான் தாக்குதல்களில் 28 பேர் உயிரிழப்பு
சிரியாவின் அலெப்போ நகரில் முன்னெடுக்கப்பட்ட வான் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள அலெப்போவின் கிழக்குப் பகுதியில் சிரிய அல்லது ரஷ்ய போர் விமானங்கள் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல பகுதிகளில் பீப்பாய் குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் வீசப்பட்ட குண்டினால் அங்கிருந்த நோயாளர்கள் மற்றும் பணியாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கம் வசமுள்ள அலெப்போவின் மேற்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் முன்னெடுத்த ரொக்கட் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.