சிம்புவுக்கு மீண்டும் ஜோடியா?- ஹன்சிகா மறுப்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. திண்டுக்கல்லில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு.
சிம்பு, ஸ்ரேயா, மகத், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். விரைவில் சென்னையில் பாடல் ஒன்றை படமாக்கவுள்ளார்கள். இப்படத்தில் 3 வேடங்களில் நடிக்க இருக்கிறார் சிம்பு. ஒரு வேடத்துக்கு ஜோடியாக மட்டுமே ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இன்னும் 2 நாயகிகள் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார்கள்.
இதில் ஒரு நாயகியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதற்கு “அச்செய்தி வெறும் வதந்தியே. அது உண்மையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தி இருக்கிறார் ஹன்சிகா.