ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த நட்சத்திர நிகழ்ச்சி ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2. கே.பாக்யராஜை தலைமை நடுவராக கொண்ட இந்த சீசன் கடந்த 18 வாரங்களுக்கும் மேலாக நடந்தது. இதில் 9 வயதான பாவாஸ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் டைட்டில் வென்றார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பாவாஸ்சுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகிறது. முதலாவதாக லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷின் தம்பியாக நடிக்கிறார். இதுகுறித்து பாவாஸ் கூறியதாவது:
இறுதிப்போட்டிக்கு வருவேன், கோப்பை பெறுவேன் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இறுதி போட்டி வரைக்கும் வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. என்னோட அம்மா, என் பள்ளி, எங்க ரமேஷ் கண்ணன் மாஸ்டர் கொடுத்த ஒத்துழைப்பும் இந்த பட்டத்துக்கு முக்கிய காரணம். இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த கார்முகில் வண்ணன், நித்யா, நிகாரிகா ஆகியோரது பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.
இறுதிப்போட்டியில் சாதாணமாக எந்த பதட்டமும் இல்லாமல் நடித்தேன். நான் வடிவேலு மட்டும்தான் பண்ணுவேன் என்று நினைத்தனர். ஆனால், எல்லா கதாபாத்திரத்துக்கும் பொருந்துவேன் என்று எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. இந்த அன்பால் இப்போது ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. என்கிறார், பாவாஸ்.