சாலை விபத்தில் குட்டிக்கரணம் அடித்த கார்: பரிதாபமாக பலியான வாலிபர்
சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் கார் பலமுறை உருண்டு சென்றதில் ஓட்டுனர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள துர்கவ் மாகாணத்தில் தான் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு 8.30 மணியளவில் வாலிபர் ஒருவர் காரில் பயணம் செய்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு Bergerstrasse என்ற பகுதிக்கு கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதி குட்டிக்கரணம் அடித்துள்ளது.
பின்னர், அதே வேகத்தில் மரம் ஒன்றின் மீது மோதிய அந்த கார் இறுதியாக அருகில் இருந்த புல்வெளியில் விழுந்தது.
பலமுறை உருண்டுச் சென்ற இந்த காரின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வாலிபரின் அடையாங்களை வெளியிடாத பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மது போதையால் நிகழ்ந்த பயங்கர விபத்து
ஆர்கவ் மாகாணத்தை சேர்ந்த 17 வயதான வாலிபர் ஒருவர் நேற்று முன் தினம் காரில் அதிவேகத்தில் பயணம் செய்துள்ளார்.
சாலையில் உள்ள வளைவுப் பகுதி ஒன்றிற்கு வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சுற்றின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
எனினும், இவ்விபத்தில் ஓட்டுனருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. வாலிபரை பொலிசார் சோதனை செய்தபோது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவரிடம் ஓட்டுனர் உரிமமும் இல்லாததால் அவர் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.