இங்கிலாந்தில் யூன் மாதம் 1ம் திகதி தொடங்கும் சாம்பியன்ஸ் கிண்ணம் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் யூன் 1-ம் திகதி தொடங்குகிறது. இப்போட்டியில் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் இருக்கும் சர்வதேச அணிகள் கலந்துகொள்கின்றன.
இதில் கலந்துகொள்ளும் அணிகளை அறிவிப்பதற்கான கடைசி நாள் கடந்த மாதம் 25-ம் திகதியுடன் முடிவடைந்தது. ஆனால் சாம்பியன்ஸ் கிண்ணம் தொடர் மூலம் கிடைக்கும் வருவாயை பங்கிடுவதில் ஐசிசி அமைப்புக்கும், பிசிசிஐ அமைப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் இந்தியா மட்டும் அணியை அறிவிக்காமல் இருந்தது.
இதனால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை, நடப்பு சாம்பியனான இந்தியா புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் டெல்லியில் கூடிய பிசிசியை அமைப்பு நீண்ட ஆலோசனைகளுக்கு பின்னர் சம்மதம் தெரிவித்தது. இதனையடுத்து சாம்பினஸ் கிண்ணம் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்துள்ளனர்.
இந்திய அணி விபரம்:
- விராட் கோஹ்லி (அணித்தலைவர்)
- சிகர் தவான்,
- ரோகித் சர்மா,
- ரஹானே,
- டோனி (கீப்பர்),
- யுவராஜ்,
- கேதார் ஜாதவ்,
- ஹர்திக் பாண்டியா,
- அஸ்வின்,
- ஜடேஜா,
- உமேஷ் யாதவ்,
- முகமது சமி,
- புவனேஸ்வர் குமார்,
- பும்ரா,
- மணீஸ் பாண்டே.