சாத்தியமான பயங்கரவாத தாக்குதலை கனடிய பொலிசார் முறியடித்துள்ளனர்?.

சாத்தியமான பயங்கரவாத தாக்குதலை கனடிய பொலிசார் முறியடித்துள்ளனர்?.

கனடாவின் முக்கிய நகரமொன்றின் மேல் நடாத்தப்படவிருந்த சாத்தியமான ஒரு பயங்கரவாத தாக்குதலை புதன்கிழமை முறியடித்ததாக ஆர்சிஎம்பி தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட்டு இந்த தற்கொலை குண்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ISIS ஆதரவாளர் ஒருவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இத்தற்கொலை குண்டுத் தாக்குதலின் சந்தேக நபர்என நம்பபடுகின்றது. ஒன்ராறியோவின் தென்பகுதி ரவுன் ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளதாக சிரிவி செய்தி அறிந்துள்ளது.
அரொன் டிரைவர் எனப்படும் 23 வயது நபர் Strathroy, Ontவில் ரொறொன்ரோ மேற்கிற்கு 225 கிலோ மீற்றர்கள் தொலைவில் வீடொன்றிற்குள் வைத்து கொல்லப்பட்டார். கனடிய புலனாய்வு துறையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிற்கு இந்நபர் நன்கு தெரிந்தவரெனவும் இஸ்லாமிய பயங்கரவாத குழுவினருக்கு அதரவு வழங்குபவர் எனவும் கூறப்படுகின்றது.
டிரைவர் இச்சதித்திட்டத்தில் தனியாக ஈடுபட்டுள்ளதாகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்கு பயமில்லை எனவும் பொலிசார் நம்புகின்றனர்.
பொலிஸ் நடவடிக்கையின் போது உரத்த வெடிப்புசத்தம், துப்பாக்கிசூடுகள் இடம்பெற்றதாகவும் ஸ்வாட் அணி, ஒரு வெடிகுண்டு அணி, ஆர்சிஎம்பி மற்றும் கனடிய இராணுவ விசேட படை பிரிவினர் காணப்பட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் IEDஎனப்படும் வெடிக்கும் சாதனங்களை உபயோகித்து தற்கொலை குண்டுத்தாக்குதலை பொது இடத்தில் உபயோகிக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவனது திட்டம் ஏராளமான இறப்புக்களை உருவாக்க ஏற்படுத்தப்பட்டதென அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இத்திட்டம் புதன்கிழமை கூட்டம் அதிகமுள்ள நேரத்தில் பிசியான இடத்தில் நடாத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சினர்.
ஆர்சிஎம்பியினர் தங்களிற்கு சாத்தியமான ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர். சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பொது மக்களிற்கு அபாயம் எதுவும் இல்லை என அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலன் விசாரனை தொடர்கிறது.மேலதி விபரங்கள் வெளியிடப்படவில்லை.

rcmp1rcmp2rcmp6rcmp4

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News