பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களிலிருந்து கிட்டத்தட்ட ஒரு டசின் சாரதிகளை சாகச வண்டியோட்டிய குற்றத்திற்காக கைது செய்ததாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
ஒரு குழுவினர் ஆடம்பர வாகனங்களை நெடுஞ்சாலை 400ல் அதி உயர் வேகத்தில் தாறுமாறாக செலுத்திக்கொண்டு உள்ளேயும் வெளியேயும் கைகளை ஆட்டியவண்ணம் சென்றதாக சாட்சியங்கள் தெரிவித்தனர்.
சாரதிகள் அனைவரினதும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன் ஒரு வாரத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட் தெரிவித்துள்ளார். வேறு சிலர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்க ப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லம்பொகினி, வெராரி மற்றும் அஸ்ரொன் மார்ட்டின் போன்ற உயர்-ரக வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களிற்குள் அடங்குகின்றன.
நெடுஞ்சாலை 400ல் Barrie, ONroute சேவைகள் நிலையத்திற்கு அருகாமையில் ஒரு லேனில் குறிப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தால் போக்குவரத்து நெரிசல் அடைய தொடங்கியது.