சஸ்கஸ்சுவான் சிறையிலிருந்து கொலைக் குற்றவாளி தப்பியோட்டம்
சஸ்கஸ்சுவான் பாதுகாப்பு சிறையிலிருந்து தப்பிச் சென்ற கொலைக் குற்றவாளி ஒருவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
64 வயதுடைய ரோஜர் ஜோசெப் என்ற குறித்த தண்டனைக் கைதி நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பின்னர் காணாமால் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இரண்டாம் நிலை கொலைக் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் இவர் மீது கட்டாயமாக அடைத்து வைத்தல், கொள்ளை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் சிறைப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேக நபர் குறித்த தகவல் அறிந்தால் பொலிஸாருக்கு அறியத் தருமாறும் சஸ்கஸ்சுவான் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.