ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபலெஸ்ஸவில் சர்வதேச தர நியமங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சிறைச்சாலை இன்று (16) திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சிறைச்சாலை ‘சுப்பர் சிறைச்சாலை ‘ என்று அழைக்கப்படுகின்றது. இங்கு சிறைக்கைதிகளுக்கும், அவர்களைப் பார்வையிட வருபவர்களுக்கும் உயர் சொகுசு வசதிகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்புதிய சிறைச்சாலையில் சுமார் 1500 சிறைக்கைதிகளை தங்கவைக்க முடியும்.
இத்திறப்பு விழாவில் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் , நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.