அநுர அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர் தொடர்பில் தற்போது ஒரு சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.
விஜித ஹேரத்தின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர், பெண்களுக்கு துன்புறுத்தல் வழங்கினார் என்ற குற்றச்சாட்டுக்களை உடையவர் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசெகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விஜித ஹேரத் போன்ற ஒரு அமைச்சர், இவ்வாறு மோசமான நபர் ஒருவரை தனது தனிப்பட்ட செயலாளராக நியமித்திருப்பதானது, அமைச்சகத்தில் உள்ள பெண்களுக்கு கூட அச்சத்தை ஏற்படுத்த கூடிய நிலையை உருவாக்கும் என தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, வெளிநாட்டு தொழில் முறைகள் மற்றும் ஒழுங்கான நடத்தைகள் உடையவர்களே குறித்த பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில், எப்படி இவ்வாறான நபர் ஒருவரை நியமிக்கலாம் எனவும் தயாசிறி கேள்வியேழுப்பியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், உருவாகியுள்ள இந்த சர்ச்சை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…