இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மூன்றாம் கட்டையில் அமைந்துள்ள ஆலடி வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்னசிங்கம் மற்றும் கட்சியின் உருப்பினர்கள், பொதுமக்கள் என பலர் பங்குபற்றியுள்ளனர்.
இதன்போது நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.