சந்தேகத்திற்கிடமான சடலம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை
கடந்த சனிக்கிழமை, கல்கரியின் தென் மேற்கு பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
17 அவென்யூ 4500 தொகுதியில், மாலை 5:30 மணியளவில் ஒரு வழிப்போக்கரினால் குறித்த சடலம் இனங்காணப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இது ஒரு கொலையாக இருக்கும் என சந்தேகித்த பொலிஸார், தற்போது இதனை வேறு கண்ணோட்டங்களுடன் நோக்கி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 18 வருடங்களாக இப்பகுதியில் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெறவில்லையெனவும், குறித்த பகுதி மிகவும் அமைதியான பகுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிகதகவல் எதனையும் வெளியிடாத பொலிஸார், இது குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.