சட்ட விரோதமாக எல்லை கடப்பவர்களை நாடு கடத்த விரும்பும் அரைவாசி கனடியர்கள்.
கிட்டத்தட்ட அரை பாதி கனடியர்கள் சட்ட விரோதமாக U.S..எல்லையை கடந்து கனடாவிற்குள் வரும் அகதிகள் மற்றும் குடிவரவாளர்களை திரும்ப அனுப்ப வேண்டும் என விரும்புகின்றனர்.
திங்கள்கிழமை வெளியிடப்பட்ட Reuters/Ipsos கருத்து கணிப்பு தெரிவிக்கின்றது.
மூன்றில் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களின் கணிப்பின் பிரகாரம் 50-சதவிகிதமானவர்கள் திரும்ப அனுப்புவதை ஆதரிக்கின்றனர்.
சட்டவிரோதமான எல்லை கடப்பதை பிரதம மந்திரியின் அரசாங்கம் கையாளும் முறையையும் தாங்கள் மறுப்பதாக குறிப்பிட்ட மூன்றில் இரண்டு பங்கினர்களும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கனடிய பிரதம மந்திரி, கனடியர்கள் எமது குடியேற்ற அமைப்பில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதே கனடா ஒரு திறந்த நாடாக இருப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளார். எங்கள் எல்லைகளின் ஒருமைப்பாடு மற்றும் நிவாரணம் கோரும் மற்றும் சிறந்த வாழ்க்கையை விரும்பும் மக்களிற்கு நாம் அவற்றை வழங்குதல் இவற்றிற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
2017-ன் முதல் இரண்டு மாதங்களிலும் 2,176 மக்கள் அகதி கோரிக்கை செய்துள்ளனர்-சட்ட விரோதமாக எல்லை கடந்து பின்னர் கோரிக்கை செய்தவர்களும் இவர்களில் அடங்குவர்.
தை, மாசி மாதங்களில் மனிரோபாவில் மட்டும் 143 பேர்கள் வரை கனடா-அமெரிக்க எல்லையை கடந்து வந்துள்ளனர் என கூறப்படுகின்றது.
சட்டவிரோத குடியேற்றம் கனடாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் என 41-சதவிகிதமானவர்கள் கருதும் வேளையில் இதனால் கனடாவின் பாதுகாப்பில் எந்த வித மாற்றமும் ஏற்படாதென 46-சதவிகிதமானவர்கள் கருதுகின்றனரென கூறப்பட்டுள்ளது.
f