சசிகலாவை பழிதீர்ப்பதற்கு..ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கும் இளையராஜாவின் சகோதரர்?
ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் நிறுத்தப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓபிஎஸ் சார்பில் மதுசூதனனும், சசிகலா சார்பில் டிடிவி திவாகரனும் போட்டியிடுகின்றனர்.
மேலும் திமுக வேட்பாளராக மருது கணேஷ், தேமுதிக வேட்பாளராக மதிவாணன், எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவையின் தீபா போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பாஜக சார்பில் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் நிறுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் சசிகலா கும்பலிடம் தனது பண்ணை வீடான பையனூர் பங்களாவை பறிகொடுத்தவர், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தபோது, பங்களாவை விற்க யோசிக்காத தன்னை சசிகலா தரப்பு மிரட்டி எழுதி வாங்கியதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
இதனால் இவர் சசிகலாவை பழிதீர்ப்பதற்கு கூட இத்தேர்தலில் களமிறங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.