ஆறு வயது சகோதரனிற்கு ரிம் ஹோட்டன் ரிம்சை வாங்கி கொடுப்பதற்காக குடும்பத்தின் பிக்அப் டிரக்கை 8-வயது சிறுவன் ஒட்டிச்சென்ற சம்பவம் வெள்ளிக்கிpழமை நடந்துள்ளது.
கலிடோனியா தென்மேற்கு பகுதியில் மெயின் வீதி வடக்கு யாவிஸ் என்ற இடத்தில் காலை 6.55மணிக்கு இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.
ரிம் ஹொட்டனிற்கு அருகாமையில் உள்ள ஊழியர் ஒருவர் பொலிசாரிடம் பிக்அப் டிரக் ஒன்று வளைவு ஒன்றின் மேல் ஏறி மோதியதாக தெரிவித்துள்ளார்.
அருகாமையில் சென்று பார்த்த ஊழியர் வாகனத்திற்குள் இரு பையன்கள் இருப்பதை கண்டுள்ளார். இவர்களில் எவரும் காயமடையவில்லை.
எட்டு வயது மற்றும் ஆறு வயதுடைய இருவரும் இவர்களது வீட்டில் இருந்து பிக்அப் டிரக்கை எடுத்து கொண்டு காலை சிற்றுண்டி வாங்க ரிம் ஹொட்டனை நோக்கி சென்றனரென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை செலுத்திய எட்டு வயதுடைய பையன் கட்டுப்பாட்டை இழந்ததால் வண்டி இயக்கி வழி பகுதியில் கட்டின் மேல் பாய்ந்து அருகில் இருந்த கடை கதவில் மோதியுள்ளது.
வாகனம் சேதமடையவில்லை.சிறுவர்கள் மீதும் குற்றங்கள் சுமத்தப்படவில்லை. பிள்ளைகள் இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.