கோஹ்லியின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்
இந்திய அணி வீரரான விராட் கோஹ்லி ஒற்றைத் தொடரில் மூன்று அரைசதங்கள் அடித்து சாதனை படைத்திருந்ததை, ஆப்கானிஸ்தான் வீரர் சாசத் தற்போது முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணி உடனான தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டி 20 போட்டி வரும் 26 ஆம் திகதி கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிக்கு தலைவராக விராட் கோஹ்லி செயல்பட உள்ளார்.
இந்நிலையில் துபாயில் ஐசிசி நடத்தும் Desert T20 போட்டி கடந்த ஜனவரி 14 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த Mohammad Shahzad நான்கு அரைசதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய அணி வீரரான விராட் கோஹ்லி கடைசியாக நடைபெற்ற உலகக்கிண்ணம் டி20 போட்டியில் மூன்று அரை சதங்கள் அடித்திருந்தார் . தற்போது அதை Shahzad நான்கு அரைசதங்கள் அடித்து முறியடித்துள்ளார்.
மேலும் இத்தொடரின் ஒரே நாளில் இரண்டு அரைசதங்கள் அடித்த ஓரே ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையும் சாசத் பெற்றுள்ளார்.