கோல் அடித்த மகிழ்ச்சியில் உயிரை விட்ட கால்பந்து வீரர்: அதிர்ச்சி வீடியோ
மிசோரம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மிசோரம் பிரீமியர் லீக் தொடரின் போது Bethlehem Vengthlang அணியும் Chanmari West அணியும் மோதின.
இதில் ஆட்டத்தின் 62 வது நிமிடத்தில் Bethlehem Vengthlang அணி சார்பில் 23 வயதான Biaksangzuala என்ற இந்திய வீரர் கோல் அடித்து அசத்தினார்.
இதில் கோல் அடித்ததை கொண்டாடும் விதமாக ஜேர்மனி வீரர்கள் அந்தரத்தில் பறப்பதை போன்றே இவரும் முயற்சி செய்து கீழே விழுந்தார்.
கிழே விழுந்த அவருக்கு முதுகு தண்டுவடப்பகுதி உடைந்ததால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அவர் கோல் அடித்து மகிழச்சியை கொண்டாடும் போது உயிரிழந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.