கோலாகலமாக நடந்த யுவராஜ் சிங்- ஹசல் கீச் திருமணம்: சண்டிகரில் குவிந்த நட்சத்திரங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ்சிங், பாலிவுட் நடிகையும், தோழியுமான ஹசல் கீச்சை இன்று திருமணம் செய்து கொண்டார்.
இதற்கான இந்திய அணி வீரர்கள் நேற்று இரவே சென்று விட்டனர், அவர்களுக்கு கோக்டைல் பார்ட்டி வைக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியை வென்ற கையுடன் இந்திய வீரர்கள் அனைவரும் அங்கு சென்றதால் திருமண வீடே களைகட்டியது.
விராட் கோஹ்லி மட்டும் வழக்கம் போல தன்னுடைய பாணியில் யுவராஜ் சிங் மற்றும் மணமகள் ஹசால் கீச்சை வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்க கூறியிருப்பார் போல் தெரிகிறது.
அதில் யுவராஜ்சிங், மணமகள் ஹசல் கீச் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் கையை உயர்த்திக் கொண்டு போஸ் கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்திய வீரர்கள் முரளி விஜய், பார்த்திவ் பட்டேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், நெக்ரா, முகமது கைப், கபில்தேவ் போன்ற பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதில் யுவராஜ்சிங் சற்று தாடியுடன் காட்சியளித்தார். அவர், கறுப்பு வண்ண பண்டகாலா வகை ஜாக்கெட் அணிந்திருந்தார்.
ஹசல் கீச், ஸ்லீவ்லெஸ் பிளைன் பனாரஸ் பார்டர் போட்ட, வெள்ளை நிற லெகன்கா அணிந்திருந்தார். அவரது ஆடைகளில் கோடா வேலைப்பாடு அதிகம் செய்யப்பட்டிருந்தது.
இதில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி பைஜாமா போன்ற உடை அணிந்து வந்திருந்தார்.
இந்நிலையில் யுவராஜ்சிங்கின் திருமணம் இன்று சண்டிகரில் இருந்து சுமார் 40 கி.மீற்றர் தொலைவில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு விமர்ச்சியாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.