கோத்தாவுடன் மஹிந்தவும் நீதிமன்றத்தில்! – பிணையில் விடுதலை
எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகளுக்காக கோத்தபாய, நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நீதிமன்றில் ஆஜராகி உள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் தற்போழுது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகைத் தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த வழக்கு விசாரணைகளின் போது வெலே சுதாவும் நீதிமன்றிற்கு வருகைத்தந்துள்ளார்.
கோத்தபாய பிணையில் விடுதலை
அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 7 சந்தேக நபர்களுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.
இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ச, மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள் உட்பட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் தலா இரண்டு இலட்சம் ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லக் கூடாது எனவும் நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.