கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள FCID யினருக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடையுத்தரவு இன்று நீடித்துள்ளது.
அரசாங்க நிதியை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தடையுத்தரவை நீடிக்க சட்டமா அதிபர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.