திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலின் காணிக்கை எவ்வளவு என்று கோவில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக புகழ் பெற்றது. இங்கு வரும் பக்தர்கள் வரிசையில் நின்று தான் உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் பக்தர்கள் 15 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வார விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை 83 ஆயிரத்து 964 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதில், 32 ஆயிரத்து 340 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டவை எண்ணப்பட்டது. இதில் ரூபாய் நோட்டுகள் மட்டும் 4.57 கோடியும் மற்றும் சில்லரை நாணயங்கள் என, மொத்தமாக 5 கோடி ரூபாய்க்கு ஒரே நாளில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.