கொழும்பு காலி வீதியில் இருந்து செரமிக் சுற்றுவட்டம் வரை இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியியும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இலங்கை குடியரசின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் முன்னேற்பாடுகளின் நிமித்தம் வீதிகள் மூடப்படவுள்ளதால் வாகன சாரதிகள் மற்றும் அவ் வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த வீதி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறித்த தினங்களில் மூடப்படவுள்ளது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.