தலைநகர் கொழும்பில் பழங்களை கொள்வனவு செய்யும் அனைத்து நுகர்வோருக்கும் அரசாங்கம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு கோட்டை, புறக்கோட்டை பிரதேசங்களில் பழ வகைகளை கொள்வனவு செய்வோர் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழவகைகளை விற்பனை செய்யப்படுகின்றமை நுகர்வோர் அதிகார சபையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழவகைகளை விற்பனை செய்ய தயாராக இருந்த வர்த்தகர்கள் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
இந்த வருடத்தில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்களை நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
நாட்டின் ஏனைய நகரங்களுக்கு பயணிகள் செல்லும் பிரதான ரயில் நிலையம் மற்றும் அரச மற்றும் தனியார் பஸ் நிலையங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.
இதன்மூலம் நாளாந்தம் லட்சக்கணக்கான மக்கள் தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.