கொழும்பில் புகையிரதத்தில் குண்டு…! தீவிர சோதனையில் பாதுகாப்பு பிரிவினர்
கொழும்பு கோட்டை புகையிர நிலையத்தில் தபால் புகையிரதத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த இரவு நேர புகையிரதம் ஒன்றிலேயே இவ்வாறு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், மற்றும் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதும் குண்டுகள் எதுவும் மீட்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
எனினும், குறித்த புகையிரதம் மருதானை புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்தும் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.