கொழும்பு மாநகர எல்லைக்குள் இருக்கும் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் முழுவதும் மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இணையவழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துச் சிக்கல்கள் அற்ற, நாட்டிலுள்ள அனைத்து கிராமியப் பாடசாலைகளையும் அதிபர்களின் விருப்பத்திற்கேற்ப பராமரிக்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.