கொலைசெய்யப்பட்ட விஜய் ரசிகர்- அதிர்ச்சி தகவல்
நடிகர் விஜய்க்கு பல ரசிகர் மன்றங்களும், சில மக்கள் இயக்கங்களும் உள்ளன. பொங்கலுக்காக ஜனவரி 12 ம் தேதி பைரவா படம் வெளியானது.
காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் இமயம் ரவி படம் வெளியவதற்கு முந்தைய நாள் தியேட்டர்களில் எப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பார்த்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகேமான குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுற்றியுள்ள பகுதியில் தேடிய போது அவர் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
போலிஷ் விசாரணையில் அவரிடம் இருந்த 250 ரூபாய் பணத்தையும், செல்போனையும் பறிக்க வழிபறிக்கும்பல் முயற்சித்துள்ளது.
இருவருக்கு நடந்த மோதலில் அவரை கொலைசெய்துவிட்டு அக்கும்பல் தப்பியோடியுள்ளது என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விஜய் இறந்த இயக்கத்தலைவர் ரவிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.