தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திவரும் நிர்வாக முடக்கல் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்பின்றது.
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை தொடர்ச்சியாகப் பெய்துவருகின்றநிலையில் அதைப் பொருட்படுத்தாது மாணவர்கள் தமது போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.