கொகெயின் போதைப்பொருள் கடத்த முற்பட்ட நால்வர் கைது
மெக்ஸிகோவிலிருந்து கனடாவுக்குள் கொகெயின் போதைப் பொருட்களை கடத்த முற்பட்ட வடக்கு ஒன்ராறியோ மற்றும் மனிடோபாவைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்.சி.எம்.பி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 29, 48 மற்றும் 56 வயது மதிக்கத்தக்க மூவர் ஒன்ராறியோ லீமிங்டன் பகுதியில் பொலிஸார் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட அதேவேளை 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் மனிடோபாவின் கிராமப்பகுதியில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நால்வரும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வர் மீதும் கொகெயின் போதைப்பொருள் கடத்தல் சதி மற்றும் கொகெயின் போதைப் பொருள் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடத்தல் சதித்திட்டம் குறித்த தகவல்கள் எவையும் பொலிஸாரால் வெளியிடப்படவில்லை. எனினும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இறக்குமதி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இருவருட விசாரணைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களிடமிருந்து 2 கிலோ கிராம் கொகெயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– See more at: http://www.canadamirror.com/canada/67020.html#sthash.8S7ejpcd.dpuf