கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை விசாரணை நடத்திய ஊடகம்? மக்கள் குழப்பம்
கேப்பாப்புலவில் தமது காணிகளை விமானப்படையினர் விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் இன்று 12வது நாளாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரவு அந்த இடத்திற்கு சென்ற ஊடகம் ஒன்று மக்களின் போராட்டம் தொடர்பாக செய்திகள் சேகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஊடகம் அங்குள்ள மக்களிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதன்போது மக்களிடம் அந்த ஊடக செய்தியாளர் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டதினால் அவர்கள் ஊடகப்போர்வையில் விசாரணை நடத்தியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்த நிலையில் குறித்த ஊடகத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு கண்டனமும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், அங்கே சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் இதனால் விமானப்படையினர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.