கேப்பாபிலவு பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான நிலை….! விடிய விடிய முற்றுகை போராட்டம்
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் இரவு முழுவது தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள 83 குடும்பங்களின் காணிகள் இன்றைய தினம் கையளிக்கப்படவிருந்தது.
எனினும், இன்றைய தினம் குறித்த பகுதியில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், படையினருக்கும், பொது மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததுடன், ஒருவித பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், தமது காணிகள் விடுவிக்க வேண்டும் என தெரிவித்து அந்த பகுதி மக்கள் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேப்பாபிலவு பகுதியில் சற்று முன்னர் பதற்றம்..! இராணுவ புலனாய்வாலர்கள் குவிப்பு
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் விமானப்படையின் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள அதேவேளை, வனவிலங்குத்துறை அதிகாரிகளுடனும் பொதுமக்கள் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பகுதியில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள 83 குடும்பங்களின் காணிகள் இன்றைய தினம் கையளிக்கப்படவிருந்தது.
எனினும், அவ் இடத்திற்கு கிராம சேவகர் வருகைத்தாரத நிலையில், காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தமது காணிகள் விடுவிக்கும் வரையிலும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து, இந்த பகுதி மக்கள் விமானப்படை அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர்.
அத்துடன், வனவிலங்குத்துறை அதிகாரிகளுடனும் பொதுமக்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இடத்தில் இராணுவ புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் சற்று முன்னர் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.