முதல்வன், இந்தியன், மும்பை எக்ஸ்பிரஸ், பாபா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித் திருப்பவர் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. பிஸியாக நடித்துக்கொண்டிருந்தவர் கடந்த 2012ம் ஆண்டு திடீரென்று கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். மனம் தளராமல் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு மறுபடியும் நடிக்க வந்திருக்கிறார். கேன்சரிலிருந்து மீண்டு 5 ஆண்டு ஆகிறது என்று தெரிவித்த மனிஷா, அதுபற்றி மேலும் கூறியது:
கேன்சர் நோயிலிருந்து முழுமையாக குணமாகி விரைவில் 5 வருடம் நிறைவடைய உள்ளது. அதை நான் கொண்டாட முடிவு செய்துள்ளேன். கடவுள் என் மீது கருணை கொண்டவராக இருக்கிறார். சிறந்த மருத்துவர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆலோசகர்கள் ஆதரவு என எல்லோருடைய கூட்டணியும் எனக்கு பலத்தை அளித்தது.
குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தற்போது நான் நடிக்க வந்திருப்பதால் படப்பிடிப் பில் பணியாற்றும் சூழல் எனக்கு நடுக்கத்தை தந்தது. நடிப்பதற்கு முன் இயக்குனர்களிடம் ஒத்திகை பார்த்துக்கொள்ளலாமா?, வசனத்தை படித்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நான் இப்படி செய்வது சரியா? தவறா? என்று எனக்கு தெரிய வில்லை. இப்போதெல்லாம் படப்பிடிப்பு முடியும் வரை இதுபோன்ற டென்ஷன் எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது’ என்றார்.