இந்த அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக செயற்படும் விதம் குறித்து சர்வதேச சமூகத்தில் முறையிடப் போவதாக அக்கட்சியின் எம்.பி. வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் என்பவற்றிடம் தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் அநீதிகளை முறையிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தவகையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்துடன் கூட்டு எதிர்க்கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.